About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

உண்மைய சொன்னேங்க...! -2

+2 படிக்கும் போது மறைஞ்சு நின்னு தம்மடிச்சதையும்,காலேஜு மொத செமஸ்டர் முடிஞ்சவுடனே நண்பன் வற்புருத்தினானால பீர் அடிச்சு ,வாந்தி எடுத்து விழுந்து கிடந்ததையும்,வேலை கிடைச்சு மொதச்சம்பளம் வாங்கிய கையோட பீர் பப் போனதையும் வீரசாகஸமா எழுதுவான்!
ஆனா இதை எதையும் ஒரு பொண்ணு செஞ்சிட்டா ஒப்பாரி ஓலமிடுவான்.
வலியும் கொண்டாட்டமும் பால் பேதம் பார்ப்பதில்லை!
பால்பேதம் பார்ப்பவர்க்கு வலியும் தெரியாது,கொண்டாடவும் தெரியாது!

உண்மைய சொன்னேங்க...! -1

எத்தனைபேர் நட்ட குழி அப்படின்னு எழுதினா ...ப்ப்அப்பா ! பட்டினத்தார் அனுபவிச்சு பாடிருக்காரும்ப்பாங்க!
பெண் தன் வலிய இப்படியான வார்த்தைகளில் எழுதினா ...பாஸு!எங்கயோ அனுபவிச்சு எழுதியிருக்கா ம்பாய்ங்க!

கற்றுக்கொண்டவை --1

உன்னைக் கண்டு பயம் என்றால் அதுக்கு மரியாதை என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலவீனம் அறியும்போது நான் பலமாகிவிட்டேன் என்று அர்த்தம்!
உன் மீது மரியாதை என்றால் அதுக்கு பயம் என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலம் அறியும்போது நானும் பலமாக வேண்டும் என்றே அர்த்தம்!

இனி என் முறை....!

சில நாட்கள் முன் தெற்கே ஒரு கோவிலுக்கு சென்றேன். பலர் வந்திருந்தார்கள். என்னையும் என் குடும்பத்தையும் பார்த்த அர்ச்சகர் கொஞ்சம் காத்திருக்க சொன்னார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அனைவரையும் அனுப்பிவிட்டு எங்களை இன்னும் சற்று உள்ளே வந்து தரிசனம் செய்ய சொன்னார். நான் மறுத்து வெளியே நின்று தரிசனம் செய்தேன். என்னை பார்த்ததும் என் சாதி அறிந்து அவர் செய்த செயல் இது. இதுதான் சாக்கு என்று நைசாக தரிசனம் செய்யவில்லை. சலுகை எனக்காகவே இருந்தாலும் வேண்டாம் போடா, நாடுதான் முக்கியம், என் சகோதரருக்கு இல்லாத சலுகை எனக்கு வேண்டாம் என்று சொல்லும் திமிர் தந்த RSSக்கு நன்றி.

இது என்னுடைய பதில்!

                                               எனக்கு கொடுக்கும் சலுகை என் சகோதரனுக்கும் வேண்டும் என திமிர் காட்டியிருந்தால் அந்த சேவக்-கிற்கு நான் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியிருப்பேன்!

வெளிச்சம்!

சூதாட்ட புகார்களுக்கு பிறகு என் வாழ்வில் கிரிக்கெட் இல்லை.
வெளிச்சத்துக்கு வரமுடியாத இந்த சாதனையாளர்களை நினைத்து வருந்துகிறேன்!


காட்சி பிழை

                                              அவள் அழுக்கடைந்த வெள்ளையாய் இருந்தாள்.நிறைமாத கர்ப்பிணியாய் ததும்ப,ததும்ப மெல்ல நடைபயின்றாள்.அவளது வால் ஒட்ட துண்டிக்கப்பட்டிருந்தது.சிறுவயதில் வளர்ப்புக்கு எடுக்கப்பட்டு பின் ஏதோ காரணத்தால் கைவிடப்பட்டவளாயிருக்ககூடும்.சுற்றும் முற்றும் பார்த்தபடியே வாயில் கவ்விய காய்ந்த,சற்றே பெரிய ரொட்டித்துண்டை கீழே விழாமல் ,எதிரிகள் பார்த்துவிடாமல் கவனமாய் வந்தாள்!பக்கத்து வீட்டுதிண்ணையின் பக்கவாட்டிலே மண்ணை முன்னங்கால்களால் பறித்து, ரொட்டியை கவனமாய் உள்ளே வைத்து மூக்கினால் மண்ணைச் சமப்படுத்தி,சிறுகல்லை நகர்த்தி அடையாளப்படுத்திக்கொன்டாள்!யாருக்கு?அவளுக்கா?இல்லை ...இரண்டொரு நாளில் ஈன்று வளர்த்தெடுக்கபோகும் தன் குட்டிகளுக்கா?நாய்களிடம் இப்படி உணவை பாதுகாத்துவைக்கும் மனோபாவம் உண்டா?சுமார் 10 வருடங்களாக நாட்டு நாய்களை வளர்த்த எனக்கு புதிராகவே இருக்கிறது!

சமூகம்

போராளியை காவு வாங்குகிறது.
சித்தாந்தவாதியை சிலையாக்கி சீரழிக்கிறது.
செல்லாக்காசுகளுக்கு பதவி கொடுத்து தன் தலை மீது தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்கிறது.!
-சமூகம்.