About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Friday, November 13, 2015

சந்திப்பு

தேவனுடனான சாத்தானின் சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"நீ எப்படி உன்னுடைய நியாயக்காரனின் வேண்டுதலையும்,அநியாயக்காரனின் வேண்டுதலையும் ஒன்றாகவே பாவிக்கிறாய்?"-இது சாத்தான்!
"ஆம்..!ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் வைக்கும் வழக்கம இல்லை!"-இது தேவன்!
"இந்த இருவரின் ஒரே மாதிரியான வேண்டுகோளை எப்படி ஒரேஅளவு கோலால் அளப்பாய்?"
"நியாயக்காரனுக்கு அதற்கான தகுதியைக் கொடுப்பேன்.அநியாயக்காரனுக்கு கொடுத்தபின் தகுதியை உயர்த்திக்கொள்கிறானா என்று பார்ப்பேன்.தகுதியால் அடைந்தவனை அரவனைத்துகொள்வேன்...தகுதியற்றவனை உயர்த்திப் பிடிப்பேன்..!
"ஏன்?"
"பிறர் பார்க்க அவன் மூக்கை அறுக்க அந்த உயரம் தேவை ! -சொல்லி புன்னகைத்தான் தேவன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
நியாயக்காரனுடனான அநியாயக்காரனது சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"உனக்கு தேவனுடனான நம்பிக்கை எப்படி வந்தது?"-இது அநியாயக்காரன்!
"நம்பிக்கை இருந்ததாலேயேதான் வேண்டுதல் வைத்தேன்! நீ எப்படி இவ்விசயத்தில்?"-இது நியாயக்காரன்!
"வேண்டுதல் பலித்ததால் நம்பிக்கை வந்தது...விரும்பியது பறி போனதால் நம்பிக்கை இழந்தேன்..."
"கொடுக்கிறவனுக்கு எடுக்கவும் உரிமை உண்டல்லவா?"
"புரியவில்லையே? "
"ஆண்டவரே ! இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது இருக்கிறார்கள்! இவர்களை மன்னியும்!
-------------------------------------------------------------------------
இது மதம் சார்ந்த பதிவல்ல..! இதில் அல்லாஹ் என்றோ,காளி என்றோ ஏன் பொருத்தமான இடங்களில் நானும் நீயும் என்று கூட எழுதி படித்து பார்த்துக் கொள்ளலாம்!

Saturday, August 15, 2015

வந்தே மாதரம்....!

இந்நேரம் வழமையான சம்பிரதாயங்களுடன் முடிந்திருக்கும்  சுதந்திர தின கொண்டாட்டங்கள் அனைத்தும்!...திட்டியும், வாழ்த்தியும் பதிவுகள் எழுதி ஊடகங்களில் தூள் கிளப்பியிருப்பார்கள் புதிய தலைமுறையினர்...நண்பர் ஒருவர் https://web.facebook.com/rajarajan1969?fref=photo  சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி கப்பல் கழகம் நடத்திய வ.உ.சிதம்பரனார் அவர்களின்  போராட்ட கால தோழர் சுப்ரமணிய சிவா
அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். உண்மையில் அவ்ர்தானா என்று சிறிது ஐயத்துடன் கேட்டிருந்தேன்..கேட்கும்போதே மனதில் சிறு அவமானமும் , கலக்கமும் இருந்தன.நான் என் ஞாபக மறதியை சபித்து கொண்டேன்.எத்தனையோ முகமறியா சுதந்திர போராட்ட தியாகிகளிடையே முகம் அறிந்தவர்களையாவது மறக்காமல் இருக்கவேண்டுமே..! 40வயதில் நமக்கு நினைவுதடுமாற்றம் என்றால் இந்த தலைமுறையினர்  சுதந்திர போராட்டத்தை பற்றி முழுதும் அறிந்திருப்பார்களா என்ன? அவர்களுக்கு நாம் விடுதலை பெற்ற விதத்தை உணர்த்த மறந்திருப்பது  நம்முடைய குறையே ஆகும். பள்ளியில் மூவர்ண தேசியக்கொடிஏற்றி விழா முடிந்த கையோடு வீடு திரும்பிய் போது ,வீட்டில் அண்ணன் மகள் ,"சித்தப்பா..! ஸ்கூல்ல நாளைக்கு சுதந்திர போராட்டம் பற்றி ஆக்டிவிட்டீஸ்  சப்மிட் பண்ணனும்...ஹெல்ப் பண்ணுங்க...!"ன்னு கேட்க ..ரொம்ப உற்சாகமாய் சுதந்திர போராட்ட வரலாறுகளை விவரிக்க ஆரம்பித்தேன்....இன்று நிஜமான சுதந்திர தின நாள் கொண்டாடிய சந்தோசம்.....! 

Saturday, August 1, 2015

போதி மரம் -2

20 வருடங்களுக்கு முன்...
-பாலா! தங்கச்சிக்கு கல்யாணம்,அவஸியம் வரனுன்டா!
-கண்டிப்பா வாரேன்டா!கடை அன்னைக்கு லீவுதான்.
-ஆமா என்னடா தாடியும் மீசையும்!நெத்தில புதுசா நாமம் வேற!
-ம்.ம்.கொஞ்சம் ஆன்மீக ஈடுபாடு!சில விசயங்கள் உணர்ந்தேன்,சில விசயங்கள் புரியல,எனக்கு தெரிஞ்ச வகையில முயற்சி பன்றேன்!
-யாராவது குரு கிட்ட கத்துகிட்டு இருக்கியா?
-தெரியல..இதுக்கு தனியா குரு தேவையான்னு புரியல!சுத்தி நடக்கிறதை பாக்குறேன். எனக்குள்ளே விவாதிக்கிறேன்.தெளிவு ஏற்பட்டா அதை முடிவு ன்னு எடுத்துக்கிறேன்.இல்லைன்னா மேலும் தேடுறேன்.
-அப்போ நான் கர்நாடகாவுள்ள வேலை பாக்குற இடத்துல எனக்கு உயிராபத்துன்னு சுரேஸ்ட்ட சொன்னியே எப்புடி?
-ஹேய்.. அப்ப நீ உன் தங்கை கல்யாணத்துக்கு என்ன கூப்பிட வல்லையா?இத தெரிஞ்சுக்கத்தான் வந்தயா?
-இல்ல்ல்லடா.....
----தொடரும்.---- 

ஆசையில் ஓர் கடிதம்...

என் கோதைக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் போதை ஊற்றி எழுத வேண்டியதில்லை...பேதை அவளை நினைத்தாலே பாதை மாறும் அளவிற்கு போதை உண்டாகும்.மறக்காமல் கடிதம் எழுதி ஃபேக் ஐடியில் அனுப்பிவிட்டேன்.அப்பாடி,,மெல்லவே உறிஞ்சினேன் மனைவி வைத்துவிட்டு போன காபி-ஐ

போதி மரம் -1

-அண்ணாச்சி! சாப்டாச்சா?
-ஓ...சாப்டாச்சே!
-அப்புறம்,..வேற..
-வேறென்ன,அண்ணாச்சி! பொண்ணு ,மாப்புள புடிச்சு போச்சு,பொண்ணுக்கு பூ வைச்சாச்சு, இனி யென்ன எனக்கு உண்டான கமிசன் தான் .ரூ 4000/- கொடுத்தா வேலை முடிஞ்சுது!
-ஏய், என்னப்பா..நீ என்ன வேலை பாத்த கமிசன் கேக்குறதுக்கு?வெறும் பேப்பரு போன் நம்பர் தான...கொடுத்த...
-அப்படில்லாம் சொல்லாதீங்க அண்ணாச்சி,எனக்கு இதுதான் தொழிலு!
-சரி,.சரி ..ரெண்டு ரூபா தரச்சொல்றேன்,நாளைக்கு கடையில கணக்கு பிள்ளைகிட்ட போயி வாங்கிக்க!
-என்னங்க இப்படி சொல்ரீங்க!
-ரொம்ப வளவள-ங்காத..குடுக்கிறதை வாங்கிட்டு போ!
-சரி..நீங்க சாப்டீங்களா அண்ணாச்சி!
-எங்கயா! வந்த விருந்தாளிகளை கவனிச்சு அனுப்பவே நேரம் சரியா இருக்கு,இனிமே தான் பந்தியில போய் உட்காரனும்!
-சாப்பாடு சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!
-சும்மாவ்லே ஒரு இலை சாப்பாடு ரூ150-லெ!
-உங்களுக்கு தெரியுமா அண்ணாச்சி மேல பந்தில சாப்பிட ஆள் இல்லை! எப்படியும் 100 பேர் சாப்பாடு மிச்சமுன்னு சமையக்காரன் சொல்லுரான்,அதாவது ரூ15000- வேஸ்ட்.!
-என்ன செய்றது.. சில நேரம் எதிர்பார்த்த ஆள் வர்லைன்னா இப்படித்தான்.
-ரூ 15000-ங்கிறது என் குடும்பத்துக்கு 3 மாச செலவுங்க.!ஆனா நான் உங்ககிட்ட கேட்டது 4000/தாங்க!
-சப்.சப்.சப்!

உண்மைய சொன்னேங்க....! --3

// ஒரே ஒரு காமராஜர்தான் இருந்தார். காங்கிரஸில் அவருக்குப் பின்னர் யாரும் இன்றுவரை அவர்காட்டிய வழியில் சற்றேனும் சென்றோர் யாரும் இருந்ததில்லை, இனிமேலும் யாரும் இருக்கப் போவதற்கான அறிகுறியும் சற்றும் இல்லை.//இது ஒரு நண்பர் ரொம்ப விவரமா காமராஜரை பற்றிய பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
---------ஒரு சந்தேகம்!---------
ஏன்டாப்பா! காமராஜர் மாதிரி யாரும் இல்லை,யாரும் வர முடியாது அப்படினு உனக்கு எதிரில் இருக்கிறவன் எல்லாத்தையும் கை யை காட்டுறயே!
நீ ஏன்டா! நான் காமராஜர் மாதிரி வருவேன் -ன்னு உனக்கு நீயே உறுதி எடுத்துக்க மாட்டேங்கிற!?

உண்மைய சொன்னேங்க...! -2

+2 படிக்கும் போது மறைஞ்சு நின்னு தம்மடிச்சதையும்,காலேஜு மொத செமஸ்டர் முடிஞ்சவுடனே நண்பன் வற்புருத்தினானால பீர் அடிச்சு ,வாந்தி எடுத்து விழுந்து கிடந்ததையும்,வேலை கிடைச்சு மொதச்சம்பளம் வாங்கிய கையோட பீர் பப் போனதையும் வீரசாகஸமா எழுதுவான்!
ஆனா இதை எதையும் ஒரு பொண்ணு செஞ்சிட்டா ஒப்பாரி ஓலமிடுவான்.
வலியும் கொண்டாட்டமும் பால் பேதம் பார்ப்பதில்லை!
பால்பேதம் பார்ப்பவர்க்கு வலியும் தெரியாது,கொண்டாடவும் தெரியாது!