About Me
- Amutham
- பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.
Thursday, March 8, 2018
Wednesday, March 7, 2018
Wednesday, December 23, 2015
புனையப்படும் வரலாறு !
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட அந்நாளைய சட்டமன்ற சபாநாயகரும், ஆன்மீகஈடுபாடு உடையவருமான மறைந்த திரு.P.T.R.பழனிவேல்ராஜன் அவர்கள் அப்போது சொற்பொழிவாற்றும் போது சொன்ன விஷயங்களில் ஒன்று திருமங்கலம் என்று ஊருக்கு பெய்ர்க்காரணம்! அவர் கூறியது இது தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சியம்மன் திருமணத்துக்கு தாலி செய்து கொடுத்த ஊர் என்பதால் இந்த ஊருக்கு திருமாங்கல்யம் என்ற பெயராகி,மருவி திருமங்கலம் என்றானது !
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை யாரும் திருமங்கலம் என்ற ஊருக்கு அந்த பெயர் வந்த காரணம் இது என்று யாரும் சொன்னதில்லை!சொன்னவர் சபாநாயகர் என்பதால் இந்த கருத்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது இன்று வரை!
பலதலைமுறைகளாய் இவ்வூரில் குடியிருக்கும் பலரிடம் பேசிப்பார்த்ததில் யாருமிப்படி ஒரு பின்னணி இருப்பதாக சொல்லவில்லை .சொன்னவர்களும் சபாநாயகர்சொல்லிதான் தெரியும் என்றார்களே தவிர அவர்களின் முன்னோர்கள் சொல்லவில்லை என்றே சொன்னார்கள்! எந்தவொரு ஆவணங்களோ,அரசு தஸ்தாவேஜுகளோ அல்லது செப்பேடுகளோ இந்த ஊருக்கான பெயர்க்காரணத்தைஇது வரை சொல்லியதில்லை.அதற்கு மாறாக தொடர்ந்து இந்த செய்தியை அழுத்தி பரப்புவதன் காரணம் புரியவில்லை!
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்பெயர்களை ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மணவர்கள் குடி, பட்டி, ஏந்தல், ஏடு, பாக்கம், ஏரி, கரை,குளம் மற்றும் மங்கலம் இப்படி முடியும் ஊர் பெயர்களுக்கு காரணம் கண்டு எழுதி வருகின்றனர்.இதில் மங்கலம் (மங்களம் அல்ல) என்று முடியும் ஊர்களுக்கு அர்த்தம் அரசனால் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் மங்கலம் என்பதாம்!நான்கு வேதங்கள் அறிந்த பிராமணனுக்கு கொடுத்த நிலம் சதுர்வேதிமங்கலம் ,3வேதங்கள அறிந்த் பிராமணனுக்கு கொடுத்த நிலம் திரிவேதி மங்கலம்,2 வேதங்கள் அறிந்த் பிராமணனுக்கு கொடுத்த நிலம் துவிவேதி மங்கலம், பட்டர்களுக்கு கொடுத்த நிலம் பட்டமங்கலம்,வேதம் ஓத மட்டும் தெரிந்த பிராமணனுக்கு கொடுத்த நிலம் திருமங்கலம் என்பதே லாஜிக்காக இருக்கிறது.

திருமங்கலம் P.K.N. ஆண்கள் மேல்நிலைபள்ளியிலிருந்து 1968ல் வெளி வந்த் பள்ளியின் வைரவிழா மலரில் 38,39-ம் பக்கங்களில் அப்போதைய தமிழாசிரியர் திரு. ஆதி.பாலசுந்தரன் அவர்கள் திருமங்கலம் என்ற தலைப்பில் எழுதிய கட்டூரையில் மேற்கானும் கருத்தை ஒட்டிய செய்தியை உள்ளடக்கி எழுதியுள்ளார்..அதில் எந்த இடத்திலும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் வழங்கியதாக செய்தி இல்லை!!

இதனை முழு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எமது எண்ணமில்லை. ஆனால் புனையப்படும் வரலாறு குறித்த சிறு கவலையே!நமக்கு தேவை ஆதாரமே யன்றி கற்பனை சுவையல்ல!
-மலர் தந்து உதவிய பிகேஎன் பள்ளி நிர்வாகத்துக்கு நன்றி

Friday, November 13, 2015
சந்திப்பு
தேவனுடனான சாத்தானின் சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"நீ எப்படி உன்னுடைய நியாயக்காரனின் வேண்டுதலையும்,அநியாயக்காரனின் வேண்டுதலையும் ஒன்றாகவே பாவிக்கிறாய்?"-இது சாத்தான்!
"ஆம்..!ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் வைக்கும் வழக்கம இல்லை!"-இது தேவன்!
"இந்த இருவரின் ஒரே மாதிரியான வேண்டுகோளை எப்படி ஒரேஅளவு கோலால் அளப்பாய்?"
"நியாயக்காரனுக்கு அதற்கான தகுதியைக் கொடுப்பேன்.அநியாயக்காரனுக்கு கொடுத்தபின் தகுதியை உயர்த்திக்கொள்கிறானா என்று பார்ப்பேன்.தகுதியால் அடைந்தவனை அரவனைத்துகொள்வேன்...தகுதியற்றவனை உயர்த்திப் பிடிப்பேன்..!
"ஏன்?"
"பிறர் பார்க்க அவன் மூக்கை அறுக்க அந்த உயரம் தேவை ! -சொல்லி புன்னகைத்தான் தேவன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நியாயக்காரனுடனான அநியாயக்காரனது சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"உனக்கு தேவனுடனான நம்பிக்கை எப்படி வந்தது?"-இது அநியாயக்காரன்!
"நம்பிக்கை இருந்ததாலேயேதான் வேண்டுதல் வைத்தேன்! நீ எப்படி இவ்விசயத்தில்?"-இது நியாயக்காரன்!
"வேண்டுதல் பலித்ததால் நம்பிக்கை வந்தது...விரும்பியது பறி போனதால் நம்பிக்கை இழந்தேன்..."
"கொடுக்கிறவனுக்கு எடுக்கவும் உரிமை உண்டல்லவா?"
"புரியவில்லையே? "
"ஆண்டவரே ! இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது இருக்கிறார்கள்! இவர்களை மன்னியும்!
-------------------------------------------------------------------------
இது மதம் சார்ந்த பதிவல்ல..! இதில் அல்லாஹ் என்றோ,காளி என்றோ ஏன் பொருத்தமான இடங்களில் நானும் நீயும் என்று கூட எழுதி படித்து பார்த்துக் கொள்ளலாம்!

Saturday, August 15, 2015
வந்தே மாதரம்....!
இந்நேரம் வழமையான சம்பிரதாயங்களுடன் முடிந்திருக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் அனைத்தும்!...திட்டியும், வாழ்த்தியும் பதிவுகள் எழுதி ஊடகங்களில் தூள் கிளப்பியிருப்பார்கள் புதிய தலைமுறையினர்...நண்பர் ஒருவர் https://web.facebook.com/rajarajan1969?fref=photo சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி கப்பல் கழகம் நடத்திய வ.உ.சிதம்பரனார் அவர்களின் போராட்ட கால தோழர் சுப்ரமணிய சிவா
அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். உண்மையில் அவ்ர்தானா என்று சிறிது ஐயத்துடன் கேட்டிருந்தேன்..கேட்கும்போதே மனதில் சிறு அவமானமும் , கலக்கமும் இருந்தன.நான் என் ஞாபக மறதியை சபித்து கொண்டேன்.எத்தனையோ முகமறியா சுதந்திர போராட்ட தியாகிகளிடையே முகம் அறிந்தவர்களையாவது மறக்காமல் இருக்கவேண்டுமே..! 40வயதில் நமக்கு நினைவுதடுமாற்றம் என்றால் இந்த தலைமுறையினர் சுதந்திர போராட்டத்தை பற்றி முழுதும் அறிந்திருப்பார்களா என்ன? அவர்களுக்கு நாம் விடுதலை பெற்ற விதத்தை உணர்த்த மறந்திருப்பது நம்முடைய குறையே ஆகும். பள்ளியில் மூவர்ண தேசியக்கொடிஏற்றி விழா முடிந்த கையோடு வீடு திரும்பிய் போது ,வீட்டில் அண்ணன் மகள் ,"சித்தப்பா..! ஸ்கூல்ல நாளைக்கு சுதந்திர போராட்டம் பற்றி ஆக்டிவிட்டீஸ் சப்மிட் பண்ணனும்...ஹெல்ப் பண்ணுங்க...!"ன்னு கேட்க ..ரொம்ப உற்சாகமாய் சுதந்திர போராட்ட வரலாறுகளை விவரிக்க ஆரம்பித்தேன்....இன்று நிஜமான சுதந்திர தின நாள் கொண்டாடிய சந்தோசம்.....!

Saturday, August 1, 2015
போதி மரம் -2
20 வருடங்களுக்கு முன்...
-பாலா! தங்கச்சிக்கு கல்யாணம்,அவஸியம் வரனுன்டா!
-கண்டிப்பா வாரேன்டா!கடை அன்னைக்கு லீவுதான்.
-ஆமா என்னடா தாடியும் மீசையும்!நெத்தில புதுசா நாமம் வேற!
-ம்.ம்.கொஞ்சம் ஆன்மீக ஈடுபாடு!சில விசயங்கள் உணர்ந்தேன்,சில விசயங்கள் புரியல,எனக்கு தெரிஞ்ச வகையில முயற்சி பன்றேன்!
-யாராவது குரு கிட்ட கத்துகிட்டு இருக்கியா?
-தெரியல..இதுக்கு தனியா குரு தேவையான்னு புரியல!சுத்தி நடக்கிறதை பாக்குறேன். எனக்குள்ளே விவாதிக்கிறேன்.தெளிவு ஏற்பட்டா அதை முடிவு ன்னு எடுத்துக்கிறேன்.இல்லைன்னா மேலும் தேடுறேன்.
-அப்போ நான் கர்நாடகாவுள்ள வேலை பாக்குற இடத்துல எனக்கு உயிராபத்துன்னு சுரேஸ்ட்ட சொன்னியே எப்புடி?
-ஹேய்.. அப்ப நீ உன் தங்கை கல்யாணத்துக்கு என்ன கூப்பிட வல்லையா?இத தெரிஞ்சுக்கத்தான் வந்தயா?
-இல்ல்ல்லடா.....
----தொடரும்.----

ஆசையில் ஓர் கடிதம்...
என் கோதைக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் போதை ஊற்றி எழுத வேண்டியதில்லை...பேதை அவளை நினைத்தாலே பாதை மாறும் அளவிற்கு போதை உண்டாகும்.மறக்காமல் கடிதம் எழுதி ஃபேக் ஐடியில் அனுப்பிவிட்டேன்.அப்பாடி,,மெல்லவே உறிஞ்சினேன் மனைவி வைத்துவிட்டு போன காபி-ஐ
Subscribe to:
Posts (Atom)