About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 15, 2015

வந்தே மாதரம்....!

இந்நேரம் வழமையான சம்பிரதாயங்களுடன் முடிந்திருக்கும்  சுதந்திர தின கொண்டாட்டங்கள் அனைத்தும்!...திட்டியும், வாழ்த்தியும் பதிவுகள் எழுதி ஊடகங்களில் தூள் கிளப்பியிருப்பார்கள் புதிய தலைமுறையினர்...நண்பர் ஒருவர் https://web.facebook.com/rajarajan1969?fref=photo  சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி கப்பல் கழகம் நடத்திய வ.உ.சிதம்பரனார் அவர்களின்  போராட்ட கால தோழர் சுப்ரமணிய சிவா
அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். உண்மையில் அவ்ர்தானா என்று சிறிது ஐயத்துடன் கேட்டிருந்தேன்..கேட்கும்போதே மனதில் சிறு அவமானமும் , கலக்கமும் இருந்தன.நான் என் ஞாபக மறதியை சபித்து கொண்டேன்.எத்தனையோ முகமறியா சுதந்திர போராட்ட தியாகிகளிடையே முகம் அறிந்தவர்களையாவது மறக்காமல் இருக்கவேண்டுமே..! 40வயதில் நமக்கு நினைவுதடுமாற்றம் என்றால் இந்த தலைமுறையினர்  சுதந்திர போராட்டத்தை பற்றி முழுதும் அறிந்திருப்பார்களா என்ன? அவர்களுக்கு நாம் விடுதலை பெற்ற விதத்தை உணர்த்த மறந்திருப்பது  நம்முடைய குறையே ஆகும். பள்ளியில் மூவர்ண தேசியக்கொடிஏற்றி விழா முடிந்த கையோடு வீடு திரும்பிய் போது ,வீட்டில் அண்ணன் மகள் ,"சித்தப்பா..! ஸ்கூல்ல நாளைக்கு சுதந்திர போராட்டம் பற்றி ஆக்டிவிட்டீஸ்  சப்மிட் பண்ணனும்...ஹெல்ப் பண்ணுங்க...!"ன்னு கேட்க ..ரொம்ப உற்சாகமாய் சுதந்திர போராட்ட வரலாறுகளை விவரிக்க ஆரம்பித்தேன்....இன்று நிஜமான சுதந்திர தின நாள் கொண்டாடிய சந்தோசம்.....! 

Saturday, August 1, 2015

போதி மரம் -2

20 வருடங்களுக்கு முன்...
-பாலா! தங்கச்சிக்கு கல்யாணம்,அவஸியம் வரனுன்டா!
-கண்டிப்பா வாரேன்டா!கடை அன்னைக்கு லீவுதான்.
-ஆமா என்னடா தாடியும் மீசையும்!நெத்தில புதுசா நாமம் வேற!
-ம்.ம்.கொஞ்சம் ஆன்மீக ஈடுபாடு!சில விசயங்கள் உணர்ந்தேன்,சில விசயங்கள் புரியல,எனக்கு தெரிஞ்ச வகையில முயற்சி பன்றேன்!
-யாராவது குரு கிட்ட கத்துகிட்டு இருக்கியா?
-தெரியல..இதுக்கு தனியா குரு தேவையான்னு புரியல!சுத்தி நடக்கிறதை பாக்குறேன். எனக்குள்ளே விவாதிக்கிறேன்.தெளிவு ஏற்பட்டா அதை முடிவு ன்னு எடுத்துக்கிறேன்.இல்லைன்னா மேலும் தேடுறேன்.
-அப்போ நான் கர்நாடகாவுள்ள வேலை பாக்குற இடத்துல எனக்கு உயிராபத்துன்னு சுரேஸ்ட்ட சொன்னியே எப்புடி?
-ஹேய்.. அப்ப நீ உன் தங்கை கல்யாணத்துக்கு என்ன கூப்பிட வல்லையா?இத தெரிஞ்சுக்கத்தான் வந்தயா?
-இல்ல்ல்லடா.....
----தொடரும்.---- 

ஆசையில் ஓர் கடிதம்...

என் கோதைக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் போதை ஊற்றி எழுத வேண்டியதில்லை...பேதை அவளை நினைத்தாலே பாதை மாறும் அளவிற்கு போதை உண்டாகும்.மறக்காமல் கடிதம் எழுதி ஃபேக் ஐடியில் அனுப்பிவிட்டேன்.அப்பாடி,,மெல்லவே உறிஞ்சினேன் மனைவி வைத்துவிட்டு போன காபி-ஐ

போதி மரம் -1

-அண்ணாச்சி! சாப்டாச்சா?
-ஓ...சாப்டாச்சே!
-அப்புறம்,..வேற..
-வேறென்ன,அண்ணாச்சி! பொண்ணு ,மாப்புள புடிச்சு போச்சு,பொண்ணுக்கு பூ வைச்சாச்சு, இனி யென்ன எனக்கு உண்டான கமிசன் தான் .ரூ 4000/- கொடுத்தா வேலை முடிஞ்சுது!
-ஏய், என்னப்பா..நீ என்ன வேலை பாத்த கமிசன் கேக்குறதுக்கு?வெறும் பேப்பரு போன் நம்பர் தான...கொடுத்த...
-அப்படில்லாம் சொல்லாதீங்க அண்ணாச்சி,எனக்கு இதுதான் தொழிலு!
-சரி,.சரி ..ரெண்டு ரூபா தரச்சொல்றேன்,நாளைக்கு கடையில கணக்கு பிள்ளைகிட்ட போயி வாங்கிக்க!
-என்னங்க இப்படி சொல்ரீங்க!
-ரொம்ப வளவள-ங்காத..குடுக்கிறதை வாங்கிட்டு போ!
-சரி..நீங்க சாப்டீங்களா அண்ணாச்சி!
-எங்கயா! வந்த விருந்தாளிகளை கவனிச்சு அனுப்பவே நேரம் சரியா இருக்கு,இனிமே தான் பந்தியில போய் உட்காரனும்!
-சாப்பாடு சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!
-சும்மாவ்லே ஒரு இலை சாப்பாடு ரூ150-லெ!
-உங்களுக்கு தெரியுமா அண்ணாச்சி மேல பந்தில சாப்பிட ஆள் இல்லை! எப்படியும் 100 பேர் சாப்பாடு மிச்சமுன்னு சமையக்காரன் சொல்லுரான்,அதாவது ரூ15000- வேஸ்ட்.!
-என்ன செய்றது.. சில நேரம் எதிர்பார்த்த ஆள் வர்லைன்னா இப்படித்தான்.
-ரூ 15000-ங்கிறது என் குடும்பத்துக்கு 3 மாச செலவுங்க.!ஆனா நான் உங்ககிட்ட கேட்டது 4000/தாங்க!
-சப்.சப்.சப்!

உண்மைய சொன்னேங்க....! --3

// ஒரே ஒரு காமராஜர்தான் இருந்தார். காங்கிரஸில் அவருக்குப் பின்னர் யாரும் இன்றுவரை அவர்காட்டிய வழியில் சற்றேனும் சென்றோர் யாரும் இருந்ததில்லை, இனிமேலும் யாரும் இருக்கப் போவதற்கான அறிகுறியும் சற்றும் இல்லை.//இது ஒரு நண்பர் ரொம்ப விவரமா காமராஜரை பற்றிய பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
---------ஒரு சந்தேகம்!---------
ஏன்டாப்பா! காமராஜர் மாதிரி யாரும் இல்லை,யாரும் வர முடியாது அப்படினு உனக்கு எதிரில் இருக்கிறவன் எல்லாத்தையும் கை யை காட்டுறயே!
நீ ஏன்டா! நான் காமராஜர் மாதிரி வருவேன் -ன்னு உனக்கு நீயே உறுதி எடுத்துக்க மாட்டேங்கிற!?

உண்மைய சொன்னேங்க...! -2

+2 படிக்கும் போது மறைஞ்சு நின்னு தம்மடிச்சதையும்,காலேஜு மொத செமஸ்டர் முடிஞ்சவுடனே நண்பன் வற்புருத்தினானால பீர் அடிச்சு ,வாந்தி எடுத்து விழுந்து கிடந்ததையும்,வேலை கிடைச்சு மொதச்சம்பளம் வாங்கிய கையோட பீர் பப் போனதையும் வீரசாகஸமா எழுதுவான்!
ஆனா இதை எதையும் ஒரு பொண்ணு செஞ்சிட்டா ஒப்பாரி ஓலமிடுவான்.
வலியும் கொண்டாட்டமும் பால் பேதம் பார்ப்பதில்லை!
பால்பேதம் பார்ப்பவர்க்கு வலியும் தெரியாது,கொண்டாடவும் தெரியாது!

உண்மைய சொன்னேங்க...! -1

எத்தனைபேர் நட்ட குழி அப்படின்னு எழுதினா ...ப்ப்அப்பா ! பட்டினத்தார் அனுபவிச்சு பாடிருக்காரும்ப்பாங்க!
பெண் தன் வலிய இப்படியான வார்த்தைகளில் எழுதினா ...பாஸு!எங்கயோ அனுபவிச்சு எழுதியிருக்கா ம்பாய்ங்க!

கற்றுக்கொண்டவை --1

உன்னைக் கண்டு பயம் என்றால் அதுக்கு மரியாதை என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலவீனம் அறியும்போது நான் பலமாகிவிட்டேன் என்று அர்த்தம்!
உன் மீது மரியாதை என்றால் அதுக்கு பயம் என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலம் அறியும்போது நானும் பலமாக வேண்டும் என்றே அர்த்தம்!

இனி என் முறை....!

சில நாட்கள் முன் தெற்கே ஒரு கோவிலுக்கு சென்றேன். பலர் வந்திருந்தார்கள். என்னையும் என் குடும்பத்தையும் பார்த்த அர்ச்சகர் கொஞ்சம் காத்திருக்க சொன்னார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அனைவரையும் அனுப்பிவிட்டு எங்களை இன்னும் சற்று உள்ளே வந்து தரிசனம் செய்ய சொன்னார். நான் மறுத்து வெளியே நின்று தரிசனம் செய்தேன். என்னை பார்த்ததும் என் சாதி அறிந்து அவர் செய்த செயல் இது. இதுதான் சாக்கு என்று நைசாக தரிசனம் செய்யவில்லை. சலுகை எனக்காகவே இருந்தாலும் வேண்டாம் போடா, நாடுதான் முக்கியம், என் சகோதரருக்கு இல்லாத சலுகை எனக்கு வேண்டாம் என்று சொல்லும் திமிர் தந்த RSSக்கு நன்றி.

இது என்னுடைய பதில்!

                                               எனக்கு கொடுக்கும் சலுகை என் சகோதரனுக்கும் வேண்டும் என திமிர் காட்டியிருந்தால் அந்த சேவக்-கிற்கு நான் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியிருப்பேன்!

வெளிச்சம்!

சூதாட்ட புகார்களுக்கு பிறகு என் வாழ்வில் கிரிக்கெட் இல்லை.
வெளிச்சத்துக்கு வரமுடியாத இந்த சாதனையாளர்களை நினைத்து வருந்துகிறேன்!


காட்சி பிழை

                                              அவள் அழுக்கடைந்த வெள்ளையாய் இருந்தாள்.நிறைமாத கர்ப்பிணியாய் ததும்ப,ததும்ப மெல்ல நடைபயின்றாள்.அவளது வால் ஒட்ட துண்டிக்கப்பட்டிருந்தது.சிறுவயதில் வளர்ப்புக்கு எடுக்கப்பட்டு பின் ஏதோ காரணத்தால் கைவிடப்பட்டவளாயிருக்ககூடும்.சுற்றும் முற்றும் பார்த்தபடியே வாயில் கவ்விய காய்ந்த,சற்றே பெரிய ரொட்டித்துண்டை கீழே விழாமல் ,எதிரிகள் பார்த்துவிடாமல் கவனமாய் வந்தாள்!பக்கத்து வீட்டுதிண்ணையின் பக்கவாட்டிலே மண்ணை முன்னங்கால்களால் பறித்து, ரொட்டியை கவனமாய் உள்ளே வைத்து மூக்கினால் மண்ணைச் சமப்படுத்தி,சிறுகல்லை நகர்த்தி அடையாளப்படுத்திக்கொன்டாள்!யாருக்கு?அவளுக்கா?இல்லை ...இரண்டொரு நாளில் ஈன்று வளர்த்தெடுக்கபோகும் தன் குட்டிகளுக்கா?நாய்களிடம் இப்படி உணவை பாதுகாத்துவைக்கும் மனோபாவம் உண்டா?சுமார் 10 வருடங்களாக நாட்டு நாய்களை வளர்த்த எனக்கு புதிராகவே இருக்கிறது!

சமூகம்

போராளியை காவு வாங்குகிறது.
சித்தாந்தவாதியை சிலையாக்கி சீரழிக்கிறது.
செல்லாக்காசுகளுக்கு பதவி கொடுத்து தன் தலை மீது தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்கிறது.!
-சமூகம்.

கனவு காணுங்கள்...!

துப்பாக்கியால் இந்த தேசம் விடுதலை பெற்றிருந்தால் இன்று எப்படி இருந்திருக்கும்!?

மிஷ்கினின் "பிசாசு"

-ஒரு திரைப்படத்தை எப்படி பாக்கனும்?
-ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்கனும்?
-ஒரு திரைப்படத்தை எப்படி ,ஏன்,எதற்கு விமர்சிக்கனும்?
-விமர்சனமும்,அபிப்பிராயமும் ஒன்றா? வேறா?
-இது எதற்கும் பதில் தெரியவில்லை எனக்கு!
-ஒருஆட்டோ
-ஒருகார்
-ஒருஸ்கூட்டி
-ஒரு விபத்து
-ஒரு மரணம்
-ஒரு வயலினிஷ்ட்
-ஒரு வீடு
-ஒரு சோடா ஓப்பனர்
-ஒரு சிம்னி
-ஒரு ஆவி
-ஓர் அம்மா
-ஒரு மாந்த்ரீகர்
-ஒரு கேள்வி
-ஓர் அப்பா
-ஒரு நிறக்குருடு
-ஒரே விடை
-அன்பு

-மிஷ்கினின் "பிசாசு"

தலைமுறை இடைவெளிகள்

அம்மாவின் அலமாரியும்,மனைவியின் அலமாரியும் சொல்லும்...
---தலைமுறை இடைவெளிகள்.

மெல்லிசான கோட்டுக்கு அந்த பக்கம்.....


துடிப்பான நடிப்பும்,நடிப்பான துடிப்பும் 







‪ரயில் பயணங்கள்

--"அரசியலுக்கு வர்ரதுக்கு மினிமம் டிகிரி யாவது வேணுங்க"
--"எதுக்கு!"
--"படிச்சவங்க வர்ரது நல்லதுதானே!"
--"ஓ...அப்ப இப்ப வரைக்கும் அன்ரிசர்வ்டுல படுத்துக்கிட்டு வந்து 
    யாரையும் உட்கார  விடாம வந்தீங்களே,நீங்க படிச்சவர்தானே!"
--...????...

‪மறைந்து போன அறிவிப்பு பலகைகள்‬

-கடன் அன்பை முறிக்கும்.
-கண்ணை பார் சிரி.
-என்னை பார் யோகம் வரும்.
-எங்களது இனிப்பு,காரவகைகள் அனைத்தும் சுத்தமான நெய் மற்றும் கடலை  எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
-பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே அனுமதி கிடையாது.
-காலணிகளை வெளியில் விடவும்.
-கைலி அணிந்து வருபவர்கள் அனுமதி இல்லை.
-எதிர் சீட்டின் மேல் கால் வைக்காதீர்.
-நாம் இருவர் நமக்கு இருவர்.
-ஒன்று பெற்றால் ஒளி மயம்.
-பாதையை கடக்கும் முன் இருபுறமும் கவனிக்கவும்.
-ஊனமுற்றோர் இருக்கை.
-சரியான சில்லறை தரவும்.

‪உலகின் கடைசி மனிதன்‬...!

 சுற்றும் முற்றும் பாத்துக்கொண்டே
 ஜிப்பை இறக்கினான்!
-யோவ்! பப்ளிக் பிளேஸ் யா! அங்கிட்டு போய் இரு!
---------------------------------------------------------------------------
ஃபேஸ்புக் பதிவுகளில் இருந்து ஒரு மீள் பதிவு!