-ம்...ம் ...எல்லோரும் போஸ்ட்டர் ஓட்டியாச்சா?, ஃபிளெக்ஸ் பேனர் போட்டாச்சா? (உணர்வு)
-அவுங்க சங்கத்துல ஒட்டீட்டாங்க...நீங்க இன்னும் ஒட்டலையா? (அரசியல்)
-நாங்கதான் அவர ஜனாதிபதியா ப்ரோமோட் பன்னோம்! இல்லயில்ல நாங்கதான் பன்னோம்!
-நல்ல மனுஷன்யா...ஒரு ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை...என் வாழ்க்கையில இப்படி ஒரு மனுஷன பாத்தது இல்ல....!
கருத்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.......
-அவுங்க சங்கத்துல ஒட்டீட்டாங்க...நீங்க இன்னும் ஒட்டலையா? (அரசியல்)
-நாங்கதான் அவர ஜனாதிபதியா ப்ரோமோட் பன்னோம்! இல்லயில்ல நாங்கதான் பன்னோம்!
-நல்ல மனுஷன்யா...ஒரு ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை...என் வாழ்க்கையில இப்படி ஒரு மனுஷன பாத்தது இல்ல....!
கருத்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.......
முதன் முதலில் இந்த ப்ளாக்கை ஆரம்பித்த பொழுது எமது பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்து இருந்தன. விழாவின் ஒரு பகுதியாக அப்துல் கலாமை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்றும் அதை ஊரில் உள்ள அனைத்து முக்கியஸ்தர்களையும் அழைப்பது என்றும் முடிவாயிருந்தது. கலாமை வரவேற்க திருமங்கலமே தயாராகியிருந்தது. கலாமை முதன்முதலில் சந்திக்க விருக்கும் கணமே எமது ப்ளாக்கின் முதல் பதிவாக இருக்க வேண்டும் என்ற உந்துதலில் நான் எழுதிய முதல் பதிவு பல குழப்பங்களுக்கு ஆளாகி நிறுத்திவிட்டேன். இப்போது அவருக்கு நினைவு அஞ்சலி பதிவு எழுத வேண்டிய நிலையை எண்ணி, மனம் துயரத்தில் உறைந்து போயிருக்கிறது..
அவரைப் பற்றி அநேகம் பேர் எழுதி விட்டார்கள். அவரின் மாண்புகள், பண்புகள்,வெற்றிகள், வாழ்வியல் சித்திரம் அனைத்தும் பலராலும் பதியப் பெற்று விட்டன..புதிதாய் எழுத ஏதும் இருக்கிறதா? அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என்பது அனைவரது ஆசையாய் இருந்தது..குழு ஆலோசனையின் போது அவரை அழைப்பதால் நமக்கென்ன லாபம்? என்று கேட்ட அறிவீலிகளும் உண்டு.உண்மையில் அவரை அழைத்து மாணவர்களிடையே உரையாடல் நிகழ்ச்சி நடத்தினால் 6000 மாணவ, மாணவியரில் சுமார் 600 பேராவது வாழ்வில் முன்னேற்றம் அடைவது குறித்த சிந்தனைக்கு இடப்பெயர்ச்சி ஆக மாட்டார்களா? என்ற ஆசையே இந்நிகழ்வுக்கு உழைத்த அனைவரின் எண்ணமாயிருந்தது. நிகழ்ச்சி வெற்றிகரமாய் முடிந்தது, இனி இவ்வெற்றிக்கு யார் காரணம்? அடுத்த போட்டி ஆரம்பமானது.குழுவில் இருந்த அனைவரும் தனித்தனியே தாங்கள்தான் காரணம் என்று சொல்லிக்கொண்டார்கள்.என் மனதில் மட்டும் கலாம் கடைசியாய் சொல்லிய வார்த்தைகள் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது.
"irresponsible person"
யாரைச் சொல்லியிருப்பார்? வெற்றிக்கு சொந்தம் கொண்டாடிய அனைவரும் மறந்து விட்ட சொல்...
என்னை இன்னும் உறுத்திக்கொண்டிருக்கிறது....
GOOD BYE KALAM!